பிரணவ் நகைக்கடை தொடர்புடைய பணமோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!
திருச்சியில் பிரபலமான நகைக்கடையாக செயல்பட்டு வந்தது பிரணவ் ஜுவல்லரி. இந்த நகைக்கடையின் கவர்ச்சிகரமான விளம்பரத்தால் மக்கள் ஈர்க்கப்பட்டனர். திருச்சியில் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இந்த நகைக்கடையில் கிளைகள் தொடங்கப்பட்டது.
பழைய நகைகளை தங்களிடம் கொடுத்து, ஒரு வருடத்திற்கு பின், எந்த வித செய்கூலி, சேதாரமும் இல்லாமல், பழைய நகையின் எடைக்கு சமமாக புதிய நகைகளை வாங்கி கொள்ளலாம் என விளம்பரப்படுத்தினர். இந்த விளம்பரத்தை நம்பிய பொதுமக்கள் பலர் பிரணவ் ஜுவல்லரியின் பல்வேறு கிளைகளில் பணத்தை கட்டியது மட்டுமல்லாமல், பழைய நகைகளை கொடுத்து, ஓராண்டு முடிந்த பிறகு புது நகைகளை பெற்றுக் கொள்வதற்கும் காத்திருந்தனர்.
கோவை மக்கள் கவனத்திற்கு..! ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு..!
ஆனால், பிரணவ் ஜுவல்லரி தங்களது நகைக்கடைகளை இழுத்து மூட தொடங்கியது. இதனால் சந்தேகமடைந்த வாடிக்கையாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்தநிலையில், கடந்த நவம்பர் 20ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், கணக்கில் வராத சுமார் 23.70 லட்சம் பணம் மற்றும் 11.60 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருச்சி பிரணவ் ஜுவல்லரி விளம்பரங்களில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.