அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு! ஐகோர்ட் உத்தரவுக்கு பின் விசாரணை.! உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

senthil balaji case

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிய அமலாக்கத்துறையின் வேண்டுகோளை நிராகரித்த நிலையில், இன்று விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்றது.  அமலாக்கத்துறையின் மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், எம்எம் சுந்தரேஷ் அமர்வு விசாரித்தனர். அப்போது, செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீது உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றத்தை சந்தேகிக்க முடியாது என்றும் தேவையெனில் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையிடலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போது அவரை காவலில் எடுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மருத்துவமனையில் உள்ளவர் குறித்து மருத்துவர்கள் கூறியதன் அடிப்படையில் தான் விசாரணை நடத்த முடியும் என்றும் சிகிச்சை முடிந்தபின் விசாரணை நடத்த வேண்டியது தானே எனவும் கூறியுள்ளனர்.

உடல்நிலை சரியில்லை என மருத்துவ குழு சான்றளித்த பின் அவரை காவலில் எடுக்க கோருகிறீர்களா? தற்போதைய நிலையில் உயர்நீதிமன்ற விசாரணை சரியாக இருக்கும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜியின் இதய அடைப்புகளை எப்படி தவறாக காட்ட முடியும்? என அவரது மனைவி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சையே கேள்விக்குறி என்ற அமலாக்கத்துறை வாதத்துக்கு செந்தில் பாலாஜி மனைவி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை வாதத்தில், கைதான 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம், எனவே காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும், உயர்நீதிமன்றம் உத்தரவு ஏற்புடையதல்ல, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது தவறு. இந்த உத்தரவால் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த முடியவில்லை, இந்த வழக்கு பிற குற்றச்சாட்டப்பட்டோருக்கு தவறான முன்னுதாரமாகிவிடும் என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன்பின், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பார்த்த பின் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என்றும் ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளதால் அதன் பின் விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆட்கொணர்வு மனுவை சென்னை ஐகோர்ட் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கவுள்ளதால்,  அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டது. மெரிட் அடிப்படையில் வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் வழக்கை காரணம்காட்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கை ஒத்திவைக்கக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டு, செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். எனவே, செந்தில் பாலாஜி விலகி உயர்நீதிமன்ற தீர்ப்பை பார்த்தபின் விசாரிக்கிறோம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்