கரூரில் செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகளை சோதனை ஈடுபட்டு வருவதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் உள்ள தனலட்சுமி மார்பில்ஸ் உரிமையாளர் வீடு, அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அதன்படி, செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம், சின்ன ஆண்டான் கோயில் பகுதியில் உள்ள கிரானைட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை சோதனைக்காக மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி குடும்பத்தினர் கரூரில் கட்டிவரும் பங்களா கட்டுமான பணியில் தொடர்புள்ள அருண் அசோசியேட் நிறுவனத்தில் ED அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருவதாகவும், கோவை- திருச்சி சாலையில் உள்ள அருண் பிரசாத் அலுவலகத்தில் CISF உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வேடச்சந்தூரில் நேற்று திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் வீடு மற்றும் அலுவலங்களில் 7க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது. செந்தில் பாலாஜிக்காக 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் பார்களில் பணம் வசூலித்த புகாரின் பேரில் சோதனை நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இன்று கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.