தமிழ்நாட்டில் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

enforcement-directorate

தமிழக்தில் கடந்த சில மாதங்களாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதன்பின் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இதன்பின் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், மற்றொரு அமைச்சரான பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி, அவர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருந்தது. இத்துடன் நிற்காமல், தமிழகத்தில் கோவை, கரூர், சென்னை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

பல்வேறு புகார்கள் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தில் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தியாகராய நகர் சரவணா நகர் மற்றும் திலக் தெரிவில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதுபோன்று தஞ்சையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் சண்முகம் என்பவருக்கு தொடர்புடைய வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட புகார்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், பல்வேறு இடங்களில் பல்வேறு குற்றசாட்டுகள் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்