திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டில் அமலாக்கத்துறை விசாரணை..!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில், நேற்று முன்தினம் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்த நிலையில் இந்த சோதனை 3-வது நாளாக நடைபெற்று வருகிறது.
அரக்கோணம் மக்களவை தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு, அலுலவகம், கல்லூரி, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் 3-ஆவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் 3-ஆவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளும் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த 2020-ல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025