அமலாக்கத்துறை அதிரடி சோதனை…உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் சொத்துகள் முடக்கம்.!!

ED

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் லைகா நிறுவனம் மற்றும் கல்லல் அறக்கட்டளை அலுவலகங்களில் சோதனைகளை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக தெரியவந்ததை அடுத்து அமலாக்கத்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது கல்லல் அறக்கட்டளைக்கும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், அதனால் இரு அறக்கட்டளை சொத்துக்களையும் முடக்கியதாக அமலாக்கத்துறை தங்கள் அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் உள்ள 34.7 லட்சம் ரூபாயும், சுமார் 36.3 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

https://www.dtnext.in/news/tamilnadu/ed-attaches-udhayanidhi-foundations-properties-in-kallal-group-case-715341

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்