முடிந்தது 2-ம் கட்ட  பேச்சுவார்த்தை!!இன்று  திமுகவுடன் நல்ல முடிவு எடுக்கப்படும்!!கே.பாலகிருஷ்ணன்

Default Image
  • நேற்று திமுக -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி இடையே  2-ம் கட்ட  பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
  • இன்று  திமுகவுடன் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்துள்ளனர்.இந்நிலையில் திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலைசிறுத்தைகள் , இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இருந்து வருகின்றனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-விடுதலை சிறுத்தைகள் கட்சி-இந்திய கம்யூனிஸ்ட்  கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில் நேற்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்தது. இந்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில், நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் திமுக தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. பேச்சுவார்த்தையில் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில்,மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று  திமுகவுடன் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்