திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களை மறைக்கவே அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு என்று இபிஎஸ் குற்றசாட்டு.
சேலம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம், ஓமலூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த 100 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது திமுக அரசு.
திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களை மறைக்கவே அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போடுகிறார்கள் என குற்றசாட்டினார். பிரதமர் சென்னை வந்த போது நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் நூல் விலையை குறைக்கக்கோரி கோரிக்கை வைக்கவில்லை. வருமானம் வரக்கூடியவைகளுக்கு மட்டுமே அவர் கோரிக்கை வைப்பார் என்றும் விமர்சித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களோடு சேர்ந்து வருவது ‘நில அபகரிப்பு. எங்கையாவது ஏமாந்தவர்கள் இருந்தால், அந்த நிலத்தை அபகரித்துவிடுவார்கள். எல்லா துறைகளிலும் ஊழல் செய்வதில் இந்தியாவிலேயே முதன்மையான அரசாக திமுக அரசு உள்ளது. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து கொள்ளை புறம் வழியாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை பிடித்திருக்கிறது.
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாலும் ’செவிடன் காதில் ஊதிய சங்கு’ போலதான் இந்த அரசு செயல்படுகிறது. நூல் விலை உயர்வால் 30 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றும் கூறினார். மேலும், அதிமுக – பாஜக இடையே எந்த உறுத்தலும் இல்லை. கழக அமைப்பு செயலாளர் பொன்னையன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று அதிமுக-பாஜக உறவு நல்ல முறையில் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…