தமிழகத்தில் கொரோனாவுக்கு விரைவில் முற்றுப்புள்ளி – மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!
- தமிழகத்தில் விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்தினார். ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதித்து வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 18 ஆயிரம் பேர் பாதிப்பட்டுள்ளனர். ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் மருத்துவர்களின் பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதல்கள் வெளிப்படையாக இருக்கும் என்றும், இதில் எந்த விதமான முறைக்கேடும் நடக்காது என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது. தற்போது தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் மிக விரைவில் கொரோனா தொற்று பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.