தமிழகத்தில் பொதுமுடக்கத்தை நீடிப்பது குறித்து வருகின்ற 30 ஆம் தேதி முடிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் இன்று காலை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் பீலா ராஜேஷ் உட்பட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்தும் ஊரடங்கு நீடிப்பதா ? அல்லது தளர்வு செய்யப்படுவதா? என்று விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பது குறித்து வரும் 30-ம் தேதி முடிவு செய்யப்படும் என மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனைக்கு பின் தகவல் தெரிய வந்துள்ளது. மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக செயற்படுத்த வேண்டிய புதிய உத்திகளை வகுக்க வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…