வில்லங்கச்சான்று இனி இ-சேவை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் – பத்திரப் பதிவுத் துறை

Published by
பாலா கலியமூர்த்தி

வில்லங்கச் சான்று இனி இ-சேவை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என பத்திரப் பதிவுத் துறை தலைவர் அறிவிப்பு.

தமிழகத்தில் சொத்து வாங்குவோர், அது தொடர்பான முந்தைய பரிமாற்றங்களை அறிய, வில்லங்க சான்று பெறுவது அவசியம். பொதுமக்கள் நேரடியாக சார் – பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்றால், தரகர்கள் ஆதிக்கத்தால் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி, விண்ணப்பிக்கும் நடைமுறையை பதிவுத்துறை அறிமுகம் செய்திருந்தது.

இந்த நிலையில், வில்லங்கச் சான்று (Encumbrance Certificate – EC) இனி இ-சேவை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என பத்திரப் பதிவுத் துறை தலைவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், 19.8.21 முதல் அனைத்து இ-சேவை மையங்களிலும்,  வில்லங்கச்சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகல் கோரி பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆணையர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனவே பொதுமக்கள் இ-சேவை மையங்கள் வழி நேரடியாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களையும் வழிமுறைகளின்படி மின்னொப்பம் இட்டு உடன் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நிலம் தொடர்பான வில்லங்க சான்றிதழ்களை இனி 1950-ம் ஆண்டு முதலே தமிழக அரசின் இணையதளமான https://tnreginet.gov.in/portal/ -ல் பார்க்கலாம் என்று பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கான ஆவணங்களை பத்திரப் பதிவு – சார்பதிவாளர் அலுவலகங்களில் கட்டணம் செலுத்திதான் பெற முடியும்.

தற்போது 1950-ம் ஆண்டு முதலே உங்கள் நிலம் தொடர்பான வில்லங்க சான்றிதழை இணையதளத்தில் பெற முடியும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி!

சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…

53 minutes ago

விரைவில் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவு? ஜெலன்ஸ்கியை அழைக்கும் டொனால்ட் டிரம்ப்!

ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…

3 hours ago

LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…

3 hours ago

நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!

டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…

4 hours ago

அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…

5 hours ago

பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

5 hours ago