வேலைவாய்ப்பு பதிவு: அரசு வேலைக்காக 67, 76,945 பேர் காத்திருப்பு – தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 நபர்கள் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
30.6.2021-ன் படி வேலைவாய்ப்பக பதிவுதாரர்கள் விவரங்கள் :
அதன்படி,
- கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 18 வயதிற்குள் உள்ள 14,01,894 பள்ளி மாணவர்கள்.
- 19 முதல் 23 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 16,49,473.
- 24 முதல் 35 வயது வரை உள்ள அரசுப்பணி வேண்டி காத்திருக்கும் வேலைநடுநர்கள் 24,88,254.
- 36 வயது முதல் 57 வயது வரை வயது முதிவு பெட்ரா பதிவுதாரர்கள் 12,26,417.
- 58 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 10,907 என மொத்தம் 67,76,945 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.
30.6.2021-ன் படி மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் விவரங்கள் :
அதன்படி,
- மாற்றுத்திறனாளிகளில், கை, கால் குறைபாடு உள்ள ஆண்கள் 69,730 பேர், பெண்கள் 36,411 பேர் என மொத்தம் 106141 பேர் பதிவு செய்துள்ளனர்.
- விழிப்புலனிழந்தோரில் ஆண்கள் 11,380 பேர், பெண்கள் 5,145 பேர் என மொத்தம் 16,525 பேர் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்துள்ளனர்.
- காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதவர்களில் ஆண்கள் 9,412 பேர், பெண்கள் 4,437 பேர் என மொத்தம் 13,849 பேர் பதிவு செய்துள்ளனர்.
- மொத்தம் மாற்றுத்திறனாளிகளில் ஆண்கள் 90,522, பெண்கள் 45,993 என இரு பிரிவினரை சேர்த்து மொத்தம் 13,6515 பேர் பதிவு செய்து அரசு பணிக்காக காத்திருக்கின்றன என தெரிவித்துள்ளனர்.