துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு பணி நியமன ஆணை வழங்கிய ஸ்டாலின் ..!
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தினர் 17 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணை.
கடந்த 2018ஆம் ஆண்டு மே22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு பணி நியமனம் ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 16 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
துப்பாக்கிச் சூட்டில் இறந்த 13 பேர் குடும்பத்தினர், தீவிர காயமடைந்த 3 பேருக்கு பணி, துப்பாக்கிச் சூட்டில் தீவிர காயமடைந்த மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் பணி நியமன ஆணையை பெறவில்லை.
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு பணி நியமன ஆணை..! pic.twitter.com/OLAqyE20qX
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 21, 2021