கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் ஊழியர் சஸ்பெண்ட்?!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுளில் இருந்து வந்தவர்களை தனிமைபடுத்த அரசு உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து, பலரது வீடுகளிலும் அடையாளமாக நோட்டிஸ் ஒட்டப்பட்டிருந்தது. அதேபோல மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீட்டிலும் இந்த நோட்டிஸ் ஒட்டப்பட்டது.
பின்னர் முகவரி மாறி ஓட்டபட்டதாக்க கூறி, அந்த நோட்டீஸ் அகற்றப்பட்டது. இது குறித்து, மறுநாள் அந்த நோட்டிஸ் ஒட்டிய அந்த பணியாளரிடம் மேலதிகாரிகள், எதற்காக கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளாராம்.
அதற்கு அந்த பணியாளர், தனது மேலதிகாரி கூறியதால் தான் ஓட்டினேன். எனக்கு எழுதப்படிக்க தெரியாது என கூறியுள்ளார். பின்னர் அந்த பணியாளரை மறுநாள் வேலைக்கு வருமாறு கூறி அனுப்பிவைத்துள்ளனர்.
மறுநாள் வேலைக்கும் அனுப்பவில்லையாம். தொடர்ந்து 10 நாட்கள் இதே போல வேலை கொடுக்காமல் நோட்டிஸ் ஒட்டிய பணியாளரை வீட்டிற்க்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பணியாளர் தன்னை சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள் என கூறி, தான் தற்கொலை செய்துகொள்ளபோவதாக குரல் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாராம். இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக பணியாளர்கள் மேலதிகாரிகளிடம் கூறி வருகின்றனர்.