இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் நினைவு நாளை முன்னிட்டு தமிழக முதலவர் மற்றும் துணைமுதல்வர் ட்வீட் செய்துள்ளனர் .
இம்மானுவேல் சேகரன் 1924 ம் ஆண்டு அக்டோபர் 9 ம் தேதி பிறந்தார். அவரை 1957ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி கொலை செய்யப்பட்டார். செப்டம்பர் இன்று அவரது 63 ஆவது நினைவு நாள். இவரது நினைவு நாளை முன்னிட்டு பலர் தங்களுது நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த அவகையில், இது குறித்து தமிழக முதலவர் மற்றும் துணைமுதல்வர் தங்களுது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளனர்.
முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், சமூக சீர்திருத்தத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கும் பாடுபட்டு உயிர்நீத்த வீரர் இம்மானுவேல் சேகரனார் அவர்களை நினைவுகூர்கிறேன் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல், துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில், பள்ளி ஆசிரியருக்கு மகனாகப் பிறந்து, பாரத தேசத்தை அடிமை கொண்டிருந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை இளவயதிலேயே எதிர்த்துப் போராடி சிறையில் அடைக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரல் கொடுத்து, தீண்டாமையை ஒழிக்க மக்களை திரண்டு எழ செய்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்விற்கு வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தியாகி திரு.இம்மானுவேல் சேகரன் அவர்களது நினைவு நாளில், அவரது தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றுவோம் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது…
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…
சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…