“இம்மானுவேல் சேகரனார் நாட்டைக் காத்த இராணுவ வீரர்;சமூக விடுதலைக்கான போராளி”- முதல்வர் ஸ்டாலின்..!
தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளில் அவரது உரிமைக்குரலை என்றும் ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்கவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இரட்டை குவளை முறைக்கு எதிராக மாநாடு,தீண்டாமை ஒழிப்பு மாநாடு ,ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராட்டம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.இதனையடுத்து, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11 ஆம் தேதி அவரது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி,இன்று பலரும் அவரது நினைவு நாளை அனுசரித்து வருகின்றனர்.இந்நிலையில்,அவரது உரிமைக்குரலை என்றும் ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“நாட்டைக் காத்த இராணுவ வீரராகவும் – சமூக விடுதலைக்கான போராளியாகவும் முனைப்புடன் செயலாற்றிய தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளில் அவரது உரிமைக்குரலை என்றும் ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்குவோம்”,என்று பதிவிட்டுள்ளார்.
நாட்டைக் காத்த இராணுவ வீரராகவும் – சமூக விடுதலைக்கான போராளியாகவும் முனைப்புடன் செயலாற்றிய தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளில் அவரது உரிமைக்குரலை என்றும் ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்குவோம். pic.twitter.com/z89EfuYYnS
— M.K.Stalin (@mkstalin) September 11, 2021