அவசர பயணமாக சென்னையிலிருந்து வெளியூர் செல்வோர் ரிப்பன் மாளிகையில் அனுமதி பெறலாம்!
கொரோனா வைரஸின் தாக்கம் பிற நாடுகளில் அதிக அளவில் இருப்பதால் தற்போது இந்தியாவிலும் 21 நாட்களுக்கு 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர் செல்பவர்கள் அனுமதி கேட்டே செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது சென்னையில் இருந்து அவசரப் பயணமாக வெளியூருக்கு செல்ல விரும்புவோர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ரிப்பன் மாளிகையில் துணை ஆணையரிடம் அனுமதி பெற்றுச் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் தான் அனுமதி கடிதத்தை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.