அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இதையடுத்து மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஜனவரி 22-ம் தேதி (அதாவது நாளை) அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நாளை பிற்பகல் 2:30 மணி வரை இயங்காது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. எனினும், அவசர பிரிவு சேவைகள் இயங்கும் எனவும் சிறப்பு கிளினிக்குகள் உட்பட அனைத்து மருத்துவமனை சேவைகளும் பிற்பகல் 2:30 மணிக்குப் பிறகு வழக்கம் போல் முழுமையாக செயல்படும் என்றும் கூறப்பட்டது.
விடுமுறையை வாபஸ் பெற்றது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை.!
இதற்கிடையில், ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பை எதிர்த்து நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜா என்பவர் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவமனை தரப்பில் நாளை திட்டமிடப்பட்ட அறுவை சிகிக்சை எதுவும் இல்லை எனவும், ஜிப்மரில் அவசர சிகிச்சைகள் வழக்கம்போல் வழங்கப்படும் என விளக்கம் கொடுக்கப்பட்டது. பின்னர் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரிசோதனைகளை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.
இதனால் ஜிப்மரில் நாளை பிற்பகல் 2:30 மணி வரை வெளிநோயாளிகள் பிரிவு இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…