ஜிப்மர் விடுமுறை வழக்கு… முடித்து வைப்பு..!

jipmer

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இதையடுத்து மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஜனவரி 22-ம் தேதி (அதாவது நாளை) அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நாளை பிற்பகல் 2:30 மணி வரை இயங்காது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. எனினும், அவசர பிரிவு சேவைகள் இயங்கும் எனவும் சிறப்பு கிளினிக்குகள் உட்பட அனைத்து மருத்துவமனை சேவைகளும் பிற்பகல் 2:30 மணிக்குப் பிறகு வழக்கம் போல் முழுமையாக செயல்படும் என்றும் கூறப்பட்டது.

விடுமுறையை வாபஸ் பெற்றது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை.!

இதற்கிடையில், ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பை எதிர்த்து நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜா என்பவர் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இவ்வழக்கை அவசர வழக்காக  விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவமனை தரப்பில் நாளை திட்டமிடப்பட்ட அறுவை சிகிக்சை எதுவும் இல்லை எனவும், ஜிப்மரில் அவசர சிகிச்சைகள் வழக்கம்போல் வழங்கப்படும் என  விளக்கம் கொடுக்கப்பட்டது. பின்னர் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரிசோதனைகளை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.

இதனால் ஜிப்மரில் நாளை பிற்பகல் 2:30 மணி வரை வெளிநோயாளிகள் பிரிவு இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk