அவசியமான செய்தி.! காவல்துறை அவசர அழைப்பு எண்கள் தற்காலிக மாற்றம்.!
ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்கள் அவசர அழைப்புகளான 100,112க்கு பதிலாக 044-46100100 மற்றும் 044-71200100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பில் சிறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாம், அதனால், ஏர்டெல், வோடஃபோன், ஜியோ வாடிக்கையாளர்கள் அவசர அழைப்புகளை மேற்கொள்வதில் தற்போது சிறு சிக்கல் உருவாகி உள்ளது.
காவல்துறை அவசர அழைப்பு எண்களான 100, 112 ஆகியவற்றை ஏர்டெல், வோடஃபோன், ஜியோ மூலமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக தொடர்புகொள்ள முடியாததால் அதற்கு மாற்றாக 044-46100100 மற்றும் 044-71200100 ஆகிய எண்களை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.