திரையரங்கங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க ஜூலை 11 அவசர கூட்டம்.!
திரையரங்கங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஜூலை 11ஆம் தேதி கூடி ஆலோசனை நடத்தவுள்ளது.
பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசிக்க, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஜூலை 11ஆம் தேதி அவசரக் கூட்டம் நடத்தவுள்ளது.
விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தங்கள், பண பரிமாற்ற சிக்கல்கள், தயாரிப்பாளர்கள் உடனான பிரச்சனைகள், ஓடிடி தளங்களால் வரும் சிக்கல் ஆகியவை குறித்து ஆலோசனையில் பேசப்படவுள்ளது. குறிப்பாக, ஓடிடி தளங்களால் திரையரங்குகள் அழிந்துவரும் சூழலில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திரையரங்குகளுக்கு பிரச்சனைகள் இன்றைக்கு ஏற்பட்டுள்ள குறித்து பல கலந்தாலோசித்து நமது முக்கிய நல்ல முடிவுகள் எடுப்பதற்காக நமது சங்கத்தின் அவரசக் கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் முக்கியத்துவத்தினை கருத்திற்கொண்டு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.