அவசர சட்டம் பிறப்பிப்பு : தமிழகத்தின் 20 -வது மாநகராட்சி தாம்பரம் ….!

தமிழகத்தின் 20 மாநகராட்சியாக தாம்பரத்தை அறிவித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்துள்ள தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் என அனைத்தையும் இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த அவசர சட்டம் மூலமாக தாம்பரம் தமிழகத்தின் 20 ஆவது மாநகராட்சியாக உருவாகியுள்ளது.