மழை,வெள்ள பாதிப்பா?,கவலை வேண்டாம்…24 மணி நேரமும் செயல்படும்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!
சென்னை:அவசர கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் செயல்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குபருவ மழை தொடங்கியுள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய தொடர் மழை பெய்தது. இதனால்,2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் 207 மிமீ மழை பதிவாகியுள்ளது.இருப்பினும்,நேற்று முதல் மீண்டும் சென்னையின் நகர், புறநகர் என அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி மழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக,சென்னையில் எங்கு திரும்பினாலும் வெள்ளகாடாக காட்சியளிக்கிறது.தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து,வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.மேலும்,சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் முழ்கி கிடக்கின்றன.
வெளி மாவட்டங்கள், மாநிங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.மேலு,பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் ஃபைபர் படகு மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து,சென்னையில் பெய்து வரும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள பொதுமக்கள் மருத்துவ உதவிக்கு தொடர்பு கொள்ள 044-29510400, 044-29510500, 9444340496, 8754448477 ஆகிய எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,அவசர கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் செயல்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
“அவசர கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் செயல்படும்,எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவ தேவை மட்டும் நிவாரணத் தேவைக்கு தொடர்பு கொள்ளலாம்.தமிழகத்தில் 5106 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.குறிப்பாக,சென்னையில் 48 முகாம்களில் 881 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் நாளைக்குள் கரை திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.அதேபோல,அவசர உதவிக்கு ஹெலிஹாப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது”,என்று கூறினார்.
மேலும்,கடந்த 1 ஆம் தேதி முதல் தற்போது வரை 44% -க்கும் அதிகமான மழை பெய்துள்ளது.தமிழகத்தில் மழை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.47 கால்நடைகள் உயிரிழப்புமற்றும் சுமார் 260 வீடுகள் சேதமடைந்துள்ளது”,என்றும் தெரிவித்துள்ளார்.