ட்விட்டர் தலைவரானார் எலான் மஸ்க்…! கவிஞர் வைரமுத்துவின் வேண்டுகோள்..!

Default Image

ட்விட்டர் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்கிற்கு கவிஞர் வைரமுத்துவின் வேண்டுகோள். 

ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் தொகைக்கு எலான் மஸ்க் தன்வசப்படுத்தினார். மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியவுடன், ட்விட்டரின் சிஇஓ பராக் அகர்வால் மற்றும் சில உயர் அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்கிற்கு கவிஞர் வைரமுத்து சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ட்விட்டர் நிறுவனத்தின் புதிய அதிபர் எலான் மஸ்க் அவர்களே! இந்தியாவின் தமிழகத்திலிருந்து வாழ்த்துகிறேன்.

வலதுசாரி இடதுசாரி இரண்டுக்கும் ட்விட்டர் ஒரு களமாகட்டும். ஆனால், பொய்ச் செய்திக்கும், மலிந்த மொழிக்கும், இழிந்த ரசனைக்கும் இடம்தர வேண்டாம். உலக நாகரிகத்தை ஒழுங்கு படுத்துங்கள் என  பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்