தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ செந்தில்பாலாஜி மீண்டும் தேர்தலில் நின்று வெற்றபெற்றால் நான் அரசியலை விட்டே விலகத் தயார் என்று அதிரடியாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 25 ஆம் தேதி)சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
இந்நிலையில் இது ஒருபுறம் இருக்க தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கரூரில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறுகையில்,செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி தொகுதியில் கொடுத்த 85 வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து ஒரு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியுள்ளார்.அதேபோல் கடந்த 4½ ஆண்டுகள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதிக்கு என்ன செய்தார்? என்று கேள்வி எழுப்பினார்.மேலும் இந்த தொகுதியில் மீண்டும் செந்தில்பாலாஜி நின்று வெற்றிபெற்றால் நான் அரசியலை விட்டே விலகத் தயார் என்று அதிரடியாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…