2 மாடிக்கு மேல் உள்ள அடுக்குமாடி கட்டடங்களில் லிஃப்ட் கட்டாயம்!
புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் 2 மாடிக்கு மேல் இருந்தால் மின்தூக்கி உள்ளிட்ட வசதிகள் கட்டாயம் என சட்டப்பேரவையில் அறிவிப்பு.
இரண்டு மாடிக்கு மேல் புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் லிஃப்ட் கட்டாயம் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளதாக மாற்றுத்திறனாளி கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள், போக்குவரத்தை மாற்றுத்திறனாளிகள் அணுக தடையில்லா உட்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
புதிதாக கட்டப்படும் 2 மாடிக்கு மேல் உள்ள அனைத்து கட்டடங்களிலும் மின்தூக்கி உள்ளிட்ட வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.