யானைகள் வழித்தடம் – செங்கல் சூளைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு!
வேகத்தை குறைத்து விபத்துக்களை தடுப்பது பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு.
கோவை பேரூர் பகுதியில் யானைகள் வழித்தடங்களில் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைகள் பாதுகாப்பது தொடர்பான வழக்கில் ஆணையிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை செயல்படுத்தி நவம்பர் 24-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் யானைகள் வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை குறைத்து விபத்துக்களை தடுப்பது பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
யானை வழித்தடத்தில் செல்லும் ரயில்களின் வேகத்தை குறைப்பது சாத்தியமில்லை என கூறுவது ஏற்புடையது அல்ல, தெற்கு ரயில்வேயின் பாலக்காடு மண்டல பொதுமேலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். கஞ்சிக்கோடு – வாளையாறு ரயில் வழித்தடத்தில் ரயில் மோதி இரு பெண் ஆணைகள் உயிரிழந்ததை அடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.