ரயிலில் மோதி யானைகள் உயிரிழக்கும் விவகாரம் – நீதிபதிகள் நேரில் ஆய்வு..!

தமிழகத்தின் பல பகுதிகளிலும் யானைகள் ரயிலில் மோதி உயிரிழக்கும் சம்பவமும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கோவையில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாமாகவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அது மட்டுமில்லாமல், கோவை பாலக்காடு ரயில்வே சாலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணியன், இளந்திரையன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய மூன்று நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.