யானைகளுக்கு கொரோனா இல்லை..!பரிசோதனை முடிவு..!

Default Image
  • முதுமலை, டாப்சிலிப் முகாமில் இருக்கும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் 11 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், கொரோனா பாதிப்பால் 9 வயது சிங்கம் ஒன்று இறந்த சம்பவம் சோகத்தை அளித்தது. இதன் காரணமாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முதுமலை, டாப்சிலிப் முகாமில் இருக்கும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் ஏற்பாடுகளை செய்தார்.

அதன் படி, முதுமலை,டாப்சிலிப், சத்தியமங்கலம், களக்காடு ஆகிய புலிகள் காப்பகத்தில் இருக்கும் 28 யானைகளுக்கு கால்நடை மருத்துவ குழுவால்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த 28 யானைகளின் மாதிரிகள் உத்தரபிரதேசம் இஷாத்நகரின் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது இதன் முடிவுகள் வெளிவந்துள்ளது. முதுமலை காப்பகத்தில் உள்ள 2 குட்டி யானைகளோடு சேர்த்து 28 யானைகளுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று முடிவுகள் வந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்