யானை மிதித்து பாகன் உயிரிழப்பு..!

யானை மிதித்து காளிமுத்து என்ற பாகன் சிகிக்சை பலனின்றி உயிரிழப்பு.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தெய்வானை யானையை பாகன் காளிமுத்து என்பவர் குளிப்பாட்டும் போது திடீரென யானைக்கு மதம் பிடித்தது. இதனால், யானை பாகன் காளிமுத்து தூக்கி வீசப்பட்டதோடு மிதித்ததாகக் கூறப்படுகிறது.
இதில், படுகாயம் அடைந்த பாகன் காளிமுத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், பாகன் காளிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யானை தெய்வானை மதம் பிடித்தது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.