யானைகள் வழித்தடம் – அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை..!
யானைகள் வழித்தடங்களில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வாழைத்தோட்டம், மசினகுடி, சீகூர் பாலம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுவாச பிரச்சினை உடன் உலா வந்த ரிவால்டோ யானையை பிடித்து முகாமில் சிகிக்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
ஆனால், வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், ரிவால்டோ யானையை பிடிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தற்போது யானைக்கு தற்போது எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் யானைகள் வழித்தடங்களில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. இதைதொடர்ந்து, ரிவால்டோ யானையை பிடித்து சிகிச்சை அளித்த பின் வனப்பகுதிக்குள் விட்டு விடுவதாக வனத்துறை விளக்கம் அளித்தனர்.