கோவையில் உணவுக்காக வீடுகளை உடைத்து சாப்பிடும் யானையை பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உணவுக்காக அங்குமிங்கும் சுற்றி அமைந்துள்ளது. பகல் வேளையில் மக்கள் குடியிருக்க கூடிய பகுதிகளில் நுழைந்து அந்த யானை தனக்கு கிடைத்த உணவுகளை உண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வனப்பகுதிக்கு மக்கள் அளித்த புகாரின் பேரில் அவர்கள் யானையை காட்டுக்குள் விரட்டி உள்ளனர். இதனைத் தொடர்ந்து காட்டுக்குள் சென்ற யானை மீண்டும் மருதமலை பகுதியிலேயே சுற்றி வந்துள்ள நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென அந்த யானை குமரன் அருகில் வசித்து வரும் செந்தில் என்பவரின் வீட்டை இடித்து அங்கிருந்து அரிசி, பருப்பு, புளி போன்ற உணவுப்பொருட்களை சாப்பிட்டுள்ளது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு அங்கேயே தங்கி இருந்த யானையை பொதுமக்கள் உதவியுடன் செந்தில்குமார் காட்டுக்குள் விரட்ட முயன்றுள்ளார். அதன்பின் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வெகு நேரம் கழித்தே சம்பவ இடத்திற்கு வந்து யானையை விரட்டியதாக கூறப்படுகிறது. ஏதும் அசம்பாவிதம் நடைபெறும் முன்னரே யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…