மின்ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம் .! திருவள்ளூர் எஸ்.பிக்கு நோட்டீஸ்.!

மின்வரிய பணியாளர் அடையாள அட்டையை காண்பித்தும் அவரை காவல்துறையினர் எப்படி பாஸ் கேட்கலாம்-மனித உரிமை ஆணையம்
சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தான் கொரோனா தாக்கம் தினமும் அதிகமாக உள்ளது. இதனால் சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது அந்த வகையில் சென்னை ஆவடியில் இ-பாஸ் இல்லாமல் சென்ற மின்வாரிய ஊழியரை போலீசார் தாக்கியுள்ளார்கள்.
நடந்தது என்னவென்றால் சென்னை ஆவடியில் இ-பாஸ் இல்லாமல் சென்ற மின்வாரிய ஊழியர் ஒருவரை போலீசார் தாக்கியுள்ளார்கள். இந்நிலையில் காவல்துறையினர் மின்வரிய பணியாளர் அடையாள அட்டையை காண்பித்தும் அவரை காவல்துறையினர் எப்படி பாஸ் கேட்கலாம் என்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 4 வாரத்தில் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு.