ஆங்கிலத்தில் மின் கணக்கீட்டாளர்கள் தேர்வா? மு.க.ஸ்டாலின் கண்டனம்
மின் கணக்கீட்டாளர்கள் தேர்வை தமிழில் நடத்த மின்துறை அமைச்சர் மறு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1300 மின்கணக்கீட்டாளர்கள் பணிகளுக்கான தேர்வுக்கு ஆங்கிலத்தில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படுமென #admkantipplgovt அறிவித்திருப்பது கிராமப்புற மாணவர்களின் வேலைவாய்ப்பை பாழடிக்கும் செயலாகும்.
அமைச்சர் தங்கமணி தவறை உணர்ந்து தமிழில் ஆன்லைன் தேர்வை நடத்த மறு அறிவிப்பை வெளியிட வேண்டும். pic.twitter.com/89LYMkqbgF
— M.K.Stalin (@mkstalin) March 5, 2020
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புற பட்டதாரிகளும், நகர்ப்புறங்களில் – ஏழ்மையான சூழ்நிலையில் பட்டப் படிப்புகளை முடித்துள்ள இளைஞர்களும், மின் கணக்கீட்டாளர் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறும் வகையில், இந்தப் பதவிக்குரிய ஆன்லைன் தேர்வினை முழுமையாகத் தமிழில் நடத்திட வேண்டும் என்றும், தவறான கேள்விகளுக்கு “நெகடிவ்” மதிப்பெண் வழங்கும் முறையைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.கிராமப்புறப் பட்டதாரிகளின் நலன் கருதி, முதலமைச்சரும் மின்துறை அமைச்சருக்கு உரிய ஆணை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.