மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்தது.இதையடுத்து, மின்சாரா வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் , ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என்றும் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட முடியாது, பழைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என மின்சார வாரியம் விளக்கம் கொடுத்தது.
இதனிடையே மின்கட்டண உயர்வு உள்ளிட்ட விவகாரம் குறித்து இன்று காணொலியில் திமுக மாவட்ட செயலாளர், எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.இந்நிலையில் மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.திமுகவினர் தங்கள் வீடுகள் முன் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…