மின்வாரிய பாதுகாப்பு நெறிமுறைகள் அறிவிப்பு!!
தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் மின் விபத்துகளை தவிர்க்க பாதுகாப்பு நெறிமுறைகளை தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்று மற்றும் மழைக் காலங்களில் மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின் மாற்றிகள், மின் பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ள்ளது.
மின்கம்பிகளுக்கு அடியில் நிற்பதையும், வாகனங்கள் நிறுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ, தொட முயற்சிப்பதோ கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் மின்சாரம் தொடர்புடைய அனைத்து சேவைகளுக்கும் மின்னகம், மின்நுகர்வோர் சேவை மையம் 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.