#Breaking:நிவாரண நகை தந்த பெண்ணுக்கு பணிநியமன ஆணை – அமைச்சர் செந்தில் பாலாஜி…!

Default Image

சேலம்,மேட்டூர் அணையை திறக்க சென்ற முதல்வர் ஸ்டாலினிடம், கொரோனா நிவாரணமாக 2 பவுன் நகையை தந்த சௌமியா என்ற பெண்ணுக்கு,தனியார் நிறுவனத்தின் பணிநியமன ஆணையை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கியுள்ளார்.

மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி திறந்து வைக்க சென்றபோது,சௌமியா என்ற இளம்பெண் ஒருவர்,கொரோனா நிவாரண நிதிக்கு தனது 2 பவுன் செயினையும்,மேலும்,வேலைவாய்ப்பு கேட்டு ஒரு கடிதத்தையும் கொடுத்தார்.

இதனையடுத்து,அந்த பெண்ணிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:”மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”,என்று தெரிவித்தார்.

இந்நிலையில்,சௌமியாவுக்கு ஒரு தனியார் நிறுவனத்தின் வேலைக்கான பணிநியமன ஆணையை,மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று வழங்கியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்