மின்கட்டணம் செலுத்த அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்று மின்சாரவாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே வருவதால் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூருக்கு ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மின்கட்டணம் கட்ட அடுத்த மாதம் 15ந் தேதி வரை அவகாசம அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது . மேலும் அபராதமின்றி கட்டணத்தை செலுத்தலாம். இணையதளம் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஜூலை 31-ஆம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.அப்பொழுது மின்சாரவாரியம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில்,சென்னை ,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை ஜூலை 15-ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.மேலும் பிற மாவட்டங்ககளில் 75 % மேலாக மின்கட்டணம் செலுத்தப்பட்டு விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…