#EB Bill: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது முழுவிவரம் இதோ !
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசைமின் நுகர்வோரில், ஒரு கோடிநுகர்வோர்களுக்கு (42 19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை. அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.
2 மாதங்களில் மொத்தம் 101-200 யூனிட வரை பயன்படுத்தும் மின்நுகர்வோர்களுக்கு (26,73 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.27.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2 மாதங்களில் மொத்தம் 201-300 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ. 72.50 உயர்கிறது.
2 மாதங்களில் மொத்தம் 301-400 யூனிட்டுகள் வரை யன்படுத்தும் மின்நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்கிறது.2 மாதங்களில் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 உயர்கிறது.
இதற்கு அடுத்ததாக 2 மாதங்களில் 501-600 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.155 உயர்கிறது.அதன் பின்பு 700 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.275 உயர்கிறது.
இரு மாதங்களில் மொத்தம் 800 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.395 உயர்கிறது.2 மாதங்களில் 900 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.565 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது குடிசை விவசாயம் கைத்தறி, விசைத்தறி மற்றும்வழிப்பாட்டுதலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.