மின் கம்பங்களில் கட்டிய கேபிள் வயர்களை அகற்ற மின்சார வாரியம் அதிரடி உத்தரவு!
மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் மின்சார வாரியம் உத்தரவு.
மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று மின்சார வாரியம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மின் கம்பங்களில் கேபிள் டிவி வயர்கள், விளம்பரப் பலகைகள் கட்டி வைப்பதன் மூலம் விபத்துக்கள் நேரிட வாய்ப்பு உள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை பின்பற்றாமல் விபத்து ஏதும் ஏற்பட்டால் அந்த பகுதியின் மின்வாரிய பொறியாளரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தமிழக அரசின் மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.