மின்கட்டண கணக்கீடு -ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்
வீட்டு மின் பயனீட்டாளர்கள் மின்கட்டண விவரங்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்தது.இதையடுத்து, மின்சாரா வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் , ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக மக்கள் 18 முதல் 20 மணி நேரம் வீட்டில் இருப்பதால் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது . பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட முடியாது, பழைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என மின்சார வாரியம் விளக்கம் கொடுத்தது.
இந்நிலையில் வீட்டு மின் பயனீட்டாளர்கள் மின்கட்டண விவரங்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . tangedco.gov.in-இல் மின் கட்டண தொகைக்கான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.மின்கட்டண முறையில் மின் நுகர்வோருக்கு சந்தேகம் இருந்தால் உதவி பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.