இதுதொடர்பாக சென்னை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணிகளாக திகழ்வது மெட்ரோ பயணிகள் தாங்கள் இறங்கும் இடத்திலிருந்து அவர்கள் சென்று வருவதற்கான வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 16 மெட்ரோ இரயில் நிலையங்களில் ரேபிடோ பைக், உபர் ஆட்டோ மற்றும் டாக்ஸி, ஸ்மார்ட் பைக் வசதிகள் உள்ளன.
12 மெட்ரோ இரயில் நிலையங்களில் இணைப்பு பேருந்துகள், 5 மெட்ரோ இரயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதிகள், எழும்பூர், சென்ட்ரல் மற்றும் கிண்டி ஆகிய மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் தென்னக ரயில்வே பயணச்சீட்டை இந்த மூன்று மெட்ரோ இரயில் நிலையங்களிளும் பெரும் வசதிக்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த வசதி விரைவில் நடைமுறைக்கு வரும். இதைதவிர சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் இருந்து ஐ.டி மற்றும் தனியார் பெறு நிறுவனங்களுக்கு சென்று வரும் பயணிகளுக்கு அந்தந்த நிறுவனங்களே மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு இணைப்பு பேருந்து வசதிகான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக பயணிகளின் எண்ணிக்கை 1.13 லட்சமாக இருந்தது. இம்மாதம் 18-ம் தேதி வரை பயணிகளின் எண்ணிக்கை 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுபோன்ற வசதிகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் செய்து வருவதை ஒட்டி பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது என தெரிவித்துள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…