தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் சுனாமியாக மாறும்..! அப்போது “அற்புதம் நிகழும்” – ரஜினி.!
நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அரசியலின் நேரம்தான் வேலை செய்யும். எம்ஜிஆர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தார். கருணாநிதி முதல்வராக ஆனதில் எம்ஜிஆரின் பங்கு மிக முக்கியம். திமுகவிலிருந்து எம்ஜிஆர் தூக்கி எறியப்பட்டதால் அனுதாப அலை ஏற்பட்டது. அதனால் எம்ஜிஆர் வெற்றிபெற்றார்.
1991-ல் ராஜீவ் காந்தி படுகொலை நடந்த நேரத்தில் திமுகவுக்கு எதிரான அலை வந்தது. அதனால் ஜெயலலிதா முதல்வரானார் எனக் கூறினார். அரசியலில் நான் போட்ட புள்ளி தற்போது சூழல் உருவாகியுள்ளது. அது மக்கள் மத்தியில் தடுக்கமுடியாது. வலுவான அலையாக மாறவேண்டும்.
தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் சுனாமியாக மாறும் .இது ஆண்டவன் கையில் இருக்கிறது. அது மக்களிடமும் இருக்கிறது . அப்போது அரசியலில் அற்புதம் நிகழும் என ரஜினி தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நான் 1996- லிருந்து அரசியல் வருகிறேன் என சொல்லிக்கொண்டு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் நான் 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி தான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னேன்.
அதற்குமுன் அரசியலுக்கு வருவீர்களா..? என கேட்டால் ஆண்டவன் கையில் தான் உள்ளது என சொல்லி வந்தேன் என கூறினார். மேலும் மூன்று முக்கிய முடிவுகளையும் அவர் அறிவித்தார் .இதையெடுத்து மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட வேண்டும் எனக்கூறி இந்த பேச்சு பெரும் பேசுபொருளாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.