வேலூர் மக்களவை தேர்தலில் மொத்தம் 1553 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும்-தலைமை தேர்தல் அதிகாரி
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வேலூர் மக்களவை தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூர் மக்களவை தேர்தலில் மொத்தம் 1553 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும். ஆண் வாக்காளர்கள் – 6,98,644, பெண் வாக்காளர்கள் – 7,28,245, மூன்றாம் பாலினத்தவர்கள் – 102, மொத்தம் 14,26,991 வாக்காளர்கள் உள்ளனர் என்று தெரிவித்தார்.