ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும். அதற்கு எதிராக செயல்பட்டால், கண்டிப்பாக அதற்கான எதிர்வினையை சந்தீர்ப்பீர்கள். ஆட்சி மாறும் காட்சி மாறும். – எடப்பாடி பழனிசாமி பேச்சு.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தான் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. ஒரு பக்கம் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் வீதிவீதியாக களமிறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக வேட்பாளர் : அதே போல, அதிமுக சார்பிலும் முன்னாள் அமைச்சர்கள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகின்றனர். இதில் நேற்று ஈரோட்டில் வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது. அதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
அதிகாரிகளுக்கு எச்சரிக்கை : அப்போது, பேசிய எடப்பாடி பழனிசாமி , வேட்பாளரை ஆதரித்து பேசிவிட்டு , பின்னர் அரசு அதிகாரிகளுக்கு ஓர் சிறு எச்சரிக்கையும் மறைமுகமாக கூறினார். அதாவது , தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும். அதற்கு எதிராக செயல்பட்டால், கண்டிப்பாக அதற்கான எதிர்வினையை சந்தீர்ப்பீர்கள். ஆட்சி மாறும் காட்சி மாறும் என குறிப்பிட்டு பேசினார்.
இபிஎஸ் அறிவுரை : மேலும் அவர் கூறுகையில், திமுகவினர் வாக்காளர்களுக்கு 1000 கணக்கில் பணம் கொடுப்பார்கள். அப்படி கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள். ஆனால், வாக்காளர்கள் கண்களுக்கு இரட்டை இலை மட்டுமே தென்படும். என தெரிவித்தார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…