எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கி கொள்ளுங்கள்… அதிமுக தேர்தல் கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு.!

Default Image

ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும்.  அதற்கு எதிராக செயல்பட்டால், கண்டிப்பாக அதற்கான எதிர்வினையை சந்தீர்ப்பீர்கள். ஆட்சி மாறும் காட்சி மாறும்.  – எடப்பாடி பழனிசாமி பேச்சு. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தான் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. ஒரு பக்கம் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் வீதிவீதியாக களமிறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர் : அதே போல, அதிமுக சார்பிலும் முன்னாள் அமைச்சர்கள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகின்றனர். இதில் நேற்று ஈரோட்டில் வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது. அதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை : அப்போது, பேசிய எடப்பாடி பழனிசாமி , வேட்பாளரை ஆதரித்து பேசிவிட்டு , பின்னர் அரசு அதிகாரிகளுக்கு ஓர் சிறு எச்சரிக்கையும் மறைமுகமாக கூறினார். அதாவது , தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும்.  அதற்கு எதிராக செயல்பட்டால், கண்டிப்பாக அதற்கான எதிர்வினையை சந்தீர்ப்பீர்கள். ஆட்சி மாறும் காட்சி மாறும் என குறிப்பிட்டு பேசினார்.

இபிஎஸ் அறிவுரை : மேலும் அவர் கூறுகையில், திமுகவினர் வாக்காளர்களுக்கு 1000 கணக்கில் பணம் கொடுப்பார்கள். அப்படி கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள். ஆனால், வாக்காளர்கள் கண்களுக்கு இரட்டை இலை மட்டுமே தென்படும். என தெரிவித்தார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்