நாளை தமிழகத்தில் தேர்தல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு

Default Image

தமிழகத்தில் நாளை ( ஏப்ரல் 18ஆம் தேதி) மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.

அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.அதேபோல் நேற்றுடன்  பரப்புரையும் முடிவு பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளுக்கு நாளை  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் 19 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அதேநாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நாளை இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் 97 மக்களவை தொகுதிகளுக்கு  தேர்தல் நடைபெறுகிறது. நாளை காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது .ஆனால் மதுரையில் மட்டும் சித்திரை திருவிழா காரணமாக  காலை 7 மணி முதல் 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனால் தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் திரைப்படம், டி.வி, ரேடியோ, சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யக் கூடாது.வாக்காளர்களை ஈர்க்க நிகழ்ச்சி நடத்தினால், 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும் .மேலும் வெளிநபர்கள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்