பள்ளியில் தேர்தல் : சின்னங்கள் ஒதுக்கீடு.., வேட்புமனு தாக்கல்.., வாக்களித்தவர்கள் விரலில் மை..! என்ன தேர்தல் தெரியுமா..?
கோவை, கோட்டை மேடு பகுதியில் செயல்பட்டு வரும், அரசு உதவிபெறும் நல்லாயன் தொடக்கப்பள்ளியில் தேர்தல் திருவிழா நடைபெற்றுள்ளது.
கோவை, கோட்டை மேடு பகுதியில் செயல்பட்டு வரும், அரசு உதவிபெறும் நல்லாயன் தொடக்கப்பள்ளியில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த பள்ளியில் 1-8 ஆம் வகுப்பு 130 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சட்டமன்ற தேர்தலை போன்று, வேட்புமனு தாக்கல், மனுக்கள் பரிசலானை, பரப்புரை, வாக்காளர் பட்டியல் என தேர்தல் திருவிழா நடைபெற்றது.
இந்த தேர்தலில் மாணவர் தலைவர், துணை தலைவர், உணவுத்துறை, விளையாட்டு துறை மற்றும் சுற்றுசூழல் போன்றவற்றிற்கான தலைவர் பதவிக்கு மாணவர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், நோட்டு, புத்தகம், பேனா போன்ற சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற நிலையில், இந்த தேர்தலில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க அதிகாரிகள் என பலர் வாக்களித்தனர். சட்டமன்ற தேர்தலை போன்று வாக்களித்தவர்களுக்கு விரலில் மை வைக்கப்பட்டது. அரசியல் கட்சியினருக்கே முன்மாதிரியாக நடத்தப்பட்ட இந்த தேர்தல், பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.