தேர்தல்கள் முடிந்தன..! இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது – கமலஹாசன்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து கமலஹாசன் ட்வீட்.
விலை உயர்வு
தமிழகத்தில் நேற்று பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து உள்ளது. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 102.58 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 77 காசுகள் உயர்ந்து 92.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
கமலஹாசன் ட்வீட்
இந்த விலைவாசி உயர்வு குறித்து அரசியல் தலைவர்கள் கருது தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பார்கள். ஆனால் அது கீழே இறங்கியபோதும் விலையைக் குறைக்கவில்லை இவர்கள். அதில் சேர்த்த லட்சம் கோடிகளை வைத்து இப்போது சரிக்கட்டலாமே…’ என பதிவிட்டுள்ளார்.
தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பார்கள். ஆனால் அது கீழே இறங்கியபோதும் விலையைக் குறைக்கவில்லை இவர்கள். அதில் சேர்த்த லட்சம் கோடிகளை வைத்து இப்போது சரிக்கட்டலாமே…
— Kamal Haasan (@ikamalhaasan) March 23, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025