சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த சங்கத்திற்கு கடைசியாக கடந்த ஆண்டு 2016 -ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 2018 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலுக்கு தடை விதித்தது. இதனால், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெறாமலே இருந்து வந்தது.
பின்னர், இந்த வாழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. இதைத்தொடர்ந்து, அடுத்து கடந்த ஜனவரி மாதம் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. அதன்படி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு கடந்த ஜனவரி 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் அன்று வாக்கு சாவடியில் நடந்த பிரச்னையால் தேதி குறிப்பிடப்படாமல் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தலை நடத்த கோரி வழக்கறிஞர்கள் சத்தியபால், எம்.வேல்முருகன், ஆர்.கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிட்டனர். இதைதொடர்ந்து நீதிபதிகள் தேர்தல் நடத்தும் குழுவிடம் எப்போது தேர்தல் நடத்தப்படும் என கருத்து கேட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இதற்கிடையில் தேர்தல் எந்த தேதியில் நடத்தப்படும், எந்த இடத்தில் தேர்தலை நடத்தப்படும் என்பதை தெரிவிக்குமாறு தேர்தல் நடத்தும் குழுவுக்கு நீதிபதிகள் கூறினர். இதைத்தொடர்ந்து, தேர்தலை வழக்கறிஞர்கள் சங்க நூலக கட்டிடத்திலேயே நடத்துவது என்றும் டிசம்பர் மாதம் தேர்தலை நடத்தலாம் என தேர்தல் நடத்தும் குழு நீதிபதிகளிடம் தெரிவித்தது.
இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் என 16 பதவிக்கு 124 பேர் போட்டியிடுகின்றனர். இந்த வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை www. mhaa.in என்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே பாந்தரா மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடி…
சென்னை : இன்று பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் 51 பேர் உட்பட நாம்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கினார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை சுற்றி சுழன்று…
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று…
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…